காதலிக்க பெண் தேடுகிறேன் என்று சிம்பு நகைச்சுவையாக கூறியுள்ளார்.
திருச்சி வந்த நடிகர் சிம்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: எப்போது திருமணம்?
பதில்: காதலித்துதான் திருமணம் செய்வேன்.
கேள்வி: யாரைக் காதலிக்கிறீர்கள்?
பதில்: காதலிக்க பெண்ணை தேடிக்கொண்டிருக்கிறேன்.
கேள்வி: காதல் திருமணத்தை உங்கள் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
பதில்: கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். இதுதான் பெண் என்று சொன்னால்போதும், அவர்கள் முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.
கேள்வி: நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பீர்களா?
பதில்: என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளரும், இயக்குநரும் முடிவு செய்துவிட்டால் நான் நடிப்பேன். மேலும் பேசிய அவர் நான் நடித்த விண்ணைத்தாண்டி வருவயா படம் முதல் முதலில் வெளிநாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. எனக்கு வெளிநாடுகளில் இருந்து வாழ்த்துகள் குவிகிறது. எனக்கு இது பெருமையாக இருக்கிறது என்றார்.




Posted in 






