உலகம் முழுவதும் வசூலை அள்ளிக்குவித்து வரும் ஜேம்ஸ் கெமரூனின் அவதார் திரைப்படத்தின் 2டி காட்சிகளுக்கு சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக அறியமுடிகிறது.
உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் அவதார், ஒரேதினத்தில் வெளியிடப்பட்ட போதும், சீனாவில் மட்டும் மிக தாமதமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டது.
அப்படியிருந்ததும், அபாரமான வரவேற்பு கிடைக்கத்தொடங்கியது அவதாருக்கு. முதல் வசூலாக 46 பில்லியன் டோலர்களை குவித்தது இத்திரைப்படம். இது சீன திரைப்பட வரலாற்றில் வரலாறு காணாத சாதனையாகும்.
தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 பில்லியன் டாலர்களை குவித்தது இந்த திரைப்படம்.
இந்த நிலையிலேயே, சீன அரசு திடீரென அவதாருக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்திகளை பரப்ப தொடங்கின. எனினும் அரசின் மாறுபட்ட கருத்துக்கள் ஒரு பக்கம் மக்களை குழப்பமடைய செய்ய, மறுபக்கம் அசுர வசூலில் அசுர வளர்ச்சியை சம்பாதித்துக்கொண்டே இருந்தது.
இத்திரைப்படத்துக்கு சீனா தடை விதிப்பதன் காரணமாக, இத்திரைப்படத்தில் இடம்பெறும் கிரபிக்ஸ் காட்சிகள், மக்களை பயமுறுத்துவதாக அமைந்திருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் 3டி வடிவில் இருப்பதால் மேலும் மக்களை பயத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம் இத்திரைப்படம்.
ஆனால், இப்படத்தில் வரும் காட்சிகளின் மூலம் மக்களின் உணர்வுகள் மேலும் தூண்டப்படலாம் என கருதியே சீன அரசு இந்த படத்துக்கு தடை விதிருத்து இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ள்ன. சீன அரசின், திட்டமிட்ட நிலப்பறிப்பு, ரியல் எஸ்ட்டேட் விவகாரங்களினால், சீன மக்கள் கடும் விசனத்திற்கு ஆளாகியிருப்பதும், சீன அரசினை எதிர்த்து போரிட, இப்படத்தில் வரும் காட்சிகள் தூண்டுகோலாக அமையக்கூடும் என்வும் கருதியே இத்தடை விதிக்கப்பட்டிருப்பதாக மேலுமொரு தகவல் தெரிவிக்கிறது.
அவதாருக்கு, சீனா விதிக்கப்போவதாக கூறியிருக்கும் தடை, அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிற போதிலும், மனித உரிமை, சுதந்திரத்தை தூண்டும் வகையிலான எதற்கும் சீனா அனுமதிப்பதில்லை என விமர்சிகின்றனர் பார்வையாளர்கள்.









