என்னைப்பற்றி தவறான தகவலை பரப்புகிறார். கனகா மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன் என்று ஆவி அமுதா கூறியுள்ளார்.
எனது கணவர் முத்துக்குமாரை ஆவி அமுதாதான் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது எனது கணவரை ஆவி அமுதாதான் கடத்தி வைத்துள்ளார் என்றும் என்றும், இதுகுறித்து புகார் கொடுக்கப் போவதாகவும் நடிகை கனகா கூறிவருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து ஆவி அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த 2007 ம் ஆண்டு கனகா என்னைப் பார்க்க வந்தது உண்மைதான். அதன் பிறகு, அவர் என்ன செய்கிறார், யாரை திருமணம் செய்து கொண்டார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. முத்துக்குமார் என்பவரை நான் அறிமுகம் செய்து வைத்ததாக கனகா கூறியுள்ளார். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் பார்த்தது கூட இல்லை.
3 ஆண்டுகளாக நான் தியானம் மட்டுமே கற்றுக்கொடுத்து வருகிறேன். பொதுத்தொண்டு போல இதனை செய்து வருகிறேன். 2007 ல் தனக்கு திருமணம் நடந்ததாக கனகா கூறியுள்ளார். முத்துக்குமாரை, நான் அறிமுகம் செய்து வைத்தது உண்மையென்றால் எனக்கு அழைப்பு விடுத்திருப்பாரே? ஏன் என்னை அழைக்கவில்லை.
என்னைப்பார்க்க வந்த ஒருவருடன் கனகா பழகி இருக்கலாம். அவரையை திருமணமும் செய்திருக்கலாம். இதற்கு நான் எப்படி பொறுப்பாக இருக்க முடியும். என்னைப்பற்றி அவர் கூறிய தகவலால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளேன்.
எனவே கனகா மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். இதற்காக எனது வக்கீலுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.









