பிரபல மலையாள நடிகர் திலகனை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கிறிஸ்டியன் பிரதர்ஸ் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு திரைப்பட கலைஞர்களின் சங்கமே காரணம் என்று மலையாள நடிகர் திலகன் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அவர் நடிகர் மம்முட்டி மீதும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் திலகன் புகார் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இனால் திலகன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் கோரிக்கை வலுப்பெற்றது.
இதனையடு்துத, பிரபல நட்சத்திரங்கள் மீது திலகன் கூறிய கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்க சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் திலகன் அதை நிராகரித்தார். இதனையடுத்து, நடிகர் திலகனை மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் நீக்குவதாக அறிவித்து உள்ளனர்



Posted in 






