டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. அங்கு மொழிகள் பற்றிய பாடப்பிரிவை, மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் படித்து வந்தனர். அவர்கள் இருவரும் பீகாரை சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் செக்ஸ் உறவு கொள்ளும் காட்சிகளை, வீடியோ படமாக எடுக்க திட்டமிட்டனர். இதற்கு தேவையான நவீன கேமிரா ஒன்றை, கம்ப்யூட்டர் சயன்ஸ் பாடம் படிக்கும் மாணவர் கொடுத்தார். அவரே இந்த கேமராவை இயக்கினார்.
அங்குள்ள “தப்தி” கல்லூரி விடுதி அறையில் மாணவரும், மாணவியும் இருப்பது போலவும், அப்போது டெலிவிஷனில் ஆபாச படம் ஓடிக்கொண்டு இருப்பது போலவும், அதைப் பார்த்ததும் மாணவரும், மாணவியும் உடல் உறவில் ஈடுபடுவது போலவும் வீடியோ எடுக்கப்பட்டது.
இதில் மிகவும் நெருக்கமான செக்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. கல்லூரி விடுதியில் ஆபாச படம் எடுத்த விவகாரம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவியது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் சிலர் தங்கள் செல்போனிலும் ஆபாச காட்சிகளை பதிவு செய்து கொண்டனர். பின்னர் அந்த காட்சியை காட்டி, மாணவியை மிரட்டினார்கள். இதற்கிடையில் இந்த ஆபாச வீடியோ, சி.டி.க்களாக டெல்லி மார்க்கெட்டில் விற்பனைக்கும் சென்று விட்டன.
இதனால் மனம் உடைந்த அந்த மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். அந்த மாணவரும் படிப்பில் இருந்து விலகி விட்டார்.
இந்த சம்பவம் 6 மாதங்களுக்கு முன் நடந்து இருக்கிறது. ஆனால் கல்லூரி நிர்வாகத்துக்கு சமீபத்தில்தான் தெரிய வந்து இருக்கிறது. இதனால் கல்லூரி நிர்வாகிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் நிர்வாகத்துக்கு புகார் கொடுத்து இருக்கிறார்.









