உலகக் கிண்ண ஹொக்கிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான்.

டில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான 12ஆவது உலகக் கோப்பை ஹொக்கிப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 41 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய வீரர் சந்தீப் சிங் 2 கோல்கள் அடித்தார். ஷிவேந்திர சிங், பிரப்ஜோத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர்.

போட்டி ஆரம்பம் முதலே பந்து இந்தியாவின் ஆதிக்கத்திலேயே இருந்தது. ஆட்டத்தின்போது இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. இதில் இரண்டை இந்தியா கோலாக்கியது. பாகிஸ்தான் ஒரு பெனால்டி கார்னரை கோலாக்கியது.

சந்தீப் சிங், ஷிவேந்திராவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதல் பாதியில் இந்தியா 20 என்ற முன்னிலை பெற்றது. 27 நிமிடத்தில் ஷநுணீவேந்திர சிங்கும், 35 நிமிடத்தில் சந்தீப் சிங்கும் தலா ஒரு கோல் அடித்து முன்னிலைப் பெற்றுத் தந்தனர்.

இரண்டாவது ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே சந்தீப் மீண்டும் ஒரு கோலை அடித்து 30 என்று முன்னிலைப் படுத்தினார். பின்னர் 57வது நிமிடத்தில் பிரப்ஜோத் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு 40 என்று முன்னிலைப் பெற்றுத் தந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் 59வது நிமிடத்தில் Nநுடஹைல் அப்பாஸ் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் பெற்றுத் தந்தார். இதன் படி 41 என்ற கோல்கணக்கு வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்விக் கண்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்ஜெண்டீனாவில் நடந்த சாம்பியன்ஸ் சாலஞ்ச் போட்டியில் 63 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.

முன்னதாக “பி’ பிரிவில் நடந்த முதல் போட்டியில் ஸ்பெயின் 42 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சம நிலையில் இருந்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஸ்பெயின் மேலும் 2 கோல்கள் அடித்து வெற்றியை தட்டிச் சென்றது.

15வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் வேகமாக அடித்த பந்து நடுவர் மீது பட்டதால் அவர் காயமுற்றார். அப்போது ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மாற்று நடுவராக மலேசியாவைச் சேர்ந்த அமர்ஜித் சிங் களமிறக்கப்பட்டார்.

முதலில் தென் ஆப்பிரிக்கா முதல் கோல் அடித்தது. அடுத்த நிமிடமே ஸ்பெயின் வீரர் ஆலிவா ஒரு கோல் அடித்து சமன் செய்தார். 21வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலிகெர் மீண்டும் ஒரு கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு 21 என்று முன்னிலைப் பெற்றுத் தந்தார். முதல் பாதி ஆட்டம் முடிவுறும் சமயத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் அயன் ஹலே கோல் அடித்து சமன் செய்தார்.

முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் எடுத்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் ஸ்பெயின் வீரர்கள் மேலும் 2 கோல்கள் அடித்து 42 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். மார்ச் 2ம் தேதி இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில், தர வரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review