பார்த்திபன் இயக்கி நடிக்கும் “வித்தகன்” படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
படத்தை விரைவில் திரையிடும் மும்முரத்தில் இருக்கிறாராம் பார்த்திபன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வித்தகன் படம் எடுக்கப்படுவதாக இருந்தது. அப்போது ஆயிரத்தில் ஒருவனில் பார்த்திபன் நடித்து வந்ததால் வித்தகன் தொடங்க தாமதமானதாம்.வித்தகனின் நாயகி பூர்ணா. இவர் தற்போது நடித்து வரும் துரோகி படமும் முடியும் நிலையில் உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் பூர்ணா வித்தியானமான கதாபாத்திரஙகளில் நடித்துள்ளார். இதனால் இந்தப் படங்கள் வெளிவந்தால் தனது நடிப்பு பேசப்படும் என்று இப்போதே பெருமையாக பேசுகிறார் பூர்ணா.
வித்தகன் பற்றி பார்த்திபன், “எனது நீண்ட நாள் கனவுப்படம் வித்தகன். படத்தின் அனைத்து பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. வித்தகனின் வித்தையை ரசிகர்கள் விரைவில் திரையில் பார்க்கலாம்.
படம் வந்தவுடன் பாராட்டு எனக்கு கிடைக்குதோ இல்லையோ வித்தகனுக்கு பாராட்டு நிச்சயம்,” என்று தனது வழக்கமான நக்கலுடன் பேசினார்.வித்தகன் மேல இவ்ளோ நம்பிக்கையா….
மிக விரைவில் பார்த்திபனின் வித்தகன்.
Posted By முத்து On 27 Aug 2010. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்
Comments are closed.









