சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அற்புத மனிதர். நான் அவரது தீவிர ரசிகை, என்று கூறியுள்ளார் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்.
தாசவதாரம் படத்தில் கமலுடன் நடித்தவர் மல்லிகா ஷெராவத். ஜாக்கி சானுடனும் நடித்துள்ளார். ரஜினி பற்றி மல்லிகா ஷெராவத் கூறி இருப்பதாவது:
“ரஜினி அற்புதமான மனிதர். கடவுளால் ஆசிர்வாதிக்கப்பட்டவர் அவர். நான் ரஜினியின் தீவிர ரசிகை.
ஹாலிவுட்டே வியக்கும் சூப்பர் ஹீரோ ரஜினி சார். உண்மையில் ஹாலிவுட் திரைப்பட விழாக்களில் ரஜினி படங்களைத் திரையிட்டால் தியேட்டர் நிரம்பி வழியும். அவரது ஸ்டைல் அப்படி.
எனக்கு பிடித்த தமிழ்படம் ஆட்டோகிராப். அந்தபடம் தேசிய விருது பெற்றது. உலக அளவில் உருவாகும் சிறந்த படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்”, என்றார்.
ரஜினியின் ரசிகை நான்! : மல்லிகா ஷெராவத்.
Posted By முத்து On 13 Aug 2010. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள்
Comments are closed.









