முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து பின்னர் வாய்ப்பு இல்லாததால் சில வருடங்களாக நடிகை கனகா பற்றி எந்த தகவலுமே இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் திடீரென்று நேற்று தான் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாகவும், கணவர் இப்போது காணவில்லை என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக விவரமறிய கனகா வீட்டுக்கு செய்தியாளர்கள் சென்றபோது வாசல் கேட்டி வைக்கப்பட்டிருந்த கடிதத்தின் மூலம் நடிகை காணவில்லை என்கிற தகவல் கிடைத்தது.
கனகாவின் செல்போனில் தொடர்புகொண்டபோது, ’என் கனவரை கண்டுபிடித்துவிட்டு நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
நடிகை கனகா விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது.









