தமிழ் இயக்குநர்கள் சங்கத்திற்கு 40 வயது ஆகப்போகிறது. இதை முன்னிட்டு 40 வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் விழா அறிவிப்பு கூட்டம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.
இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட அனைத்து இயக்குநர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
‘’இந்த விழாவுக்கு யார் தலைமையேற்பார். திமுகவா? அதிமுகவா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’இது அரசியல் விழா அல்ல’’என்று பதிலளித்தார் பாரதிராஜா.
சீமான் சிறையில் இருக்கிறார். இயக்குநர் என்கிற முறையில் அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா? அவர் விடுதலை ஆவதற்கு இயக்குநர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அவர் கைது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று சரமாரியாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பாரதிராஜா, ‘’சீமான் கைது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
அவரின் கைது விவகாரம் கட்சி ரீதியானது. அவர் அதை கட்சி ரீதியாகத்தான் அணுகுவார். அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார்.



Posted in 






