அசின் இலங்கை போனதும், அதுவும் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்ததும்.மண்டையில அடிபட்டா மடி பக்கம் வீங்குமா? கிட்டதட்ட அதே நிலைதான் காவல் காதல் படத்திற்கு. இதில் அசின் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக எப்.எம்.எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு வியாபாரம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவிலிருக்கிற தமிழ் அமைப்பு ஒன்று காவல் காதல் படத்தை வெளிநாட்டில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறது. இந்த அமைப்பின் கீழ் சுமார் முப்பது அமைப்புகள் இயங்குகின்றனவாம். உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கிற இந்த அமைப்புகள் படம் வெளிவருகிற போது தங்கள் எதிர்ப்பை காட்ட துணிந்திருக்கிறார்கள். அசின் இலங்கை போனதும், அதுவும் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்ததும் கொதிப்படைய வைத்திருக்கிறது அவர்களை.
ஒரு படத்தின் வியாபாரத்தில் குறிப்பிடக் கூடிய கவுரவ தொகை இந்த வெளிநாட்டு வியாபாரத்தில்தான் கிடைக்கிறது. நிலைமை இப்படியிருக்க தனது படத்திற்கு வந்திருக்கிற தடைகளையும், கண்டனங்களையும் கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் விஜய். ஏற்கனவே வெளிநாட்டிலும் சரி, உள் நாட்டிலும் சரி, விஜய்யின் வியாபாரத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருப்பது நிஜம். இவருக்கு இருந்த வியாபார மதிப்பை சர்வ சாதாரணமாக கிராஸ் பண்ணிவிட்டார் சூர்யா. இதுவே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது விஜய்யை. இந்த நேரத்தில் அசின் மூலம் வந்த சரிவை எப்படி நிமித்துவது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.
ஈழ பிரச்சனை உச்சத்தில் இருந்த போது தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவர்தான் விஜய். தனது அக்கறையை மறுபடியும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இப்போது. அதற்கான ஏற்பாடுகளும் இன்னொரு பக்கம் சைலன்ட்டாக நடந்து வருகிறதாம்.



Posted in 






