உற்சாகத்தில் த்ரிஷா வசூலை குவிக்கும் கட்டா மிட்டா.

trisha

கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய த்ரிஷா, கட்டாமிட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே அம்மணி வெற்றி நாயகியாகி விட்டார். தன்னை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தியில் நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. கட்டா மிட்டா படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அக்ஷைகுமார் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. www.ulavan.netபடத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடியாகும். படம் வெளிவருவதற்கு முன்பே விற்பனை உரிமை வகையில் ரூ.48 கோடிக்கு விலைபோனது. திரையிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.20கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்த வெற்றி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாக த்ரிஷா கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் ரசிகர்கள் என்னை ரசித்ததைப் போலவே இந்தி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி எனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வெற்றியை தொடருவேன், என்றார். படத்தின் நாயகன் அக்ஷய் அளித்துள்ள பேட்டியில், எனது விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. படத்தில் என்னுடன் உழைத்த அத்தனைபேருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் சிறந்த முறையில் தனது உழைப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில், குடும்ப பாங்கான படத்தை பிரியதர்ஷன் எடுத்துள்ளார், என கூறியுள்ளார்.

Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review