அசினை வெறுப்பேற்றும் த்ரிஷா!

thirisa1

தொழில் போட்டி எப்படியெல்லாம் பேச வைக்குது பாருங்க? வேறொன்றுமில்லை, அசினின் இலங்கை பயணம் பற்றி த்ரிஷா அடிக்கிற காமெண்ட் எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஆகியிருக்கிறது. இந்திக்கு போன த்ரிஷா, அங்கு ஏற்கனவே பேஸ்மெண்ட் போட்டிருந்த அசினின் அஸ்திவாரத்தை தோண்டி வெளியே எடுத்து போட்டுவிட்டார். வருகிற வாய்ப்புகள் எல்லாமே இவர் பக்கம் திரும்ப, அசின் முகத்தில் அல்ட்ரா மாடர்ன் அடுப்பு. இந்த நேரத்தில்தான் போதாத காலத்தில் பூனைக்கும் வயிற்றுவலி என்பது போல இலங்கை விவகாரத்தில் மாட்டிக்கொண்டார் அசின். எந்த மாதிரி பேசினால் தன் மீதுள்ள கோபம் தீரும் என்று நாளரு பேட்டியாக அளித்து ரசிகர்களையும் நடிகர் சங்கத்தையும் குளிர வைக்க முயல்கிறார்.
ஆனால் த்ரிஷா, நானாக இருந்தால் நடிகர் சங்கத்தை கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டேன். அதுவும் இலங்கை போகிற விஷயத்தில் யார் கூப்பிட்டாலும் ‘நோ’ சொல்லியிருப்பேன். அது தனிப்பட்ட அழைப்பாக இருந்தாலும் சரி, படப்பிடிப்பாக இருந்தாலும் சரி என்றெல்லாம் பேட்டியளித்து இன்னும் வெறுப்பேற்றுகிறார் அசினை. இனி அவர் வந்து என்ன பேசுவாரோ?

Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review