அஜித் நடித்து ஹிட்டான ‘பில்லா’ மீண்டும் பார்ட் டூவாக எடுக்கப்படவுள்ளது. இந்த ’பில்லா-2’ படத்திற்கான கதையினை விஷ்னுவர்தன் அஜித்திடம் கூறியுள்ளார். கதை பிடித்துப்போக அஜித் ’பில்லா-2’வில் நடிக்க இருகிறார்.அஜித் தற்போது நடிக்கவிருக்கும் ‘மங்காத்தா’ படம் 4 முன்னணி கதாநாயகன்கள் நடிக்க, தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. தற்போது நாகர்ஜூனா மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அடுத்த 2 முன்னணி நடிகர்கள் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் மங்காத்தா ஆட்டம் ஆக்ஸ்டு முதல் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், மதராசபட்டினம் படத்தை பார்த்த அஜித், இயக்குனர் விஜய்யிடம் தனக்கும் மதராசபட்டினம் போன்ற ஒரு நல்ல கதை அம்சமுள்ளப் படம் வேண்டும் என்று கேட்டுவருகிறர். இயக்குனர் விஜய்யின் முதல் படம் அஜித் நடித்த ‘கிரீடம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்யும் அஜித்துக்கான கதையினை யோசித்து வருகிறார்.
எது எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உறுதியாக ’பில்லா-2’ தனது அதிரடியில் கலக்குவார் என்கிறார்கள் பில்லா குழுவினர்.
அதேல்லாம் இருக்கட்டும் பில்லா-2 வில் நீச்சலுடை நாயகி யாரு? தமன்னாவா இலியானாவா?



Posted in 






