“அது ஒரு கெட்ட கனவு. மறக்க முயற்சி பண்றேன்” என்றார் மாண்டலின் ராஜேஷ். மீராஜாஸ்மினுடனான காதல் குறித்துதான் இப்படியொரு விரக்தியான பதில். ஆனால் அபஸ்வரம் ஒலித்த இந்த காதலில் மறுபடியும் பூபாளம்.
ஒன்றாக திரிந்த மீராஜாஸ்மின் திடீரென்று தனது காதலர் மாண்டலின் ராஜேஷை விட்டு விலகினார். பிரசாந்துடன் ஒரு படத்தில் நடித்த மீரா அவர் மீது காதல் வயப்பட்டு விட்டதாகவும், ராஜேஷை பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. அதை உறுதிப்படுத்துவது போலவே வருத்தமும், விரக்தியுமாக பேட்டியளித்தார் ராஜேஷ். அது போன வருஷம். இது இந்த வருஷம் என்பது மாதிரி மீண்டும் கைகோர்க்க ஆரம்பித்துள்ளது இந்த ஜோடி.
கடந்த 15 ந் தேதி தனது பிறந்த நாளை பெங்களூரில் கொண்டாடினார் மீராஜாஸ்மின். அப்போது இவர் ஊட்டிய முதல் கேக் துண்டை ருசித்தவர் சாட்சாத் ராஜேஷ்தான். இந்த சம்பவத்தை அடுத்து, ‘பிரிந்தவர் கூடினர்’ என்ற இனிப்பு செய்தி நாடெங்கிலும் பரவியிருக்கிறது. ரொம்ப நல்ல செய்திதான்!
இனிமேலாவது வாசிக்கிறதை விட்டுட்டு கல்யாணத்தை பற்றி யோசிங்க பிரதர்…









