தமிழ்சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் பெற்ற குடும்பம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவினுடையது. வாழையடி வாழையாக கலை வளர்க்கும் அந்த குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் வரப்போகிறார்… அவர் எம்.ஆர்.ஹரி ராதாரவி.
நடிகர் சங்க செயலாளர் ராதாரவியின் மகனான இவர், அப்பாவின் தயாரிப்பில் உருவாகும் ‘திருமந்திரம்’ என்ற படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகிறார். வழக்கமாக தங்கள் பிள்ளைகளை ஹீரோவாக ஆக்கி பார்ப்பதுதானே இப்போதைய ஸ்டைல்?
அதெல்லாம் வேண்டாம் என்கிறாராம் ராதாரவி. எங்க குடும்பத்திலே எல்லாருமே வில்லனாகதான் அறிமுகம் ஆனோம். என் பிள்ளையும் அப்படியே ஆகிட்டு போகட்டும் என்கிறாராம். வருகிற 25 ந் தேதி குற்றாலத்தில் இதன் படத்துவக்க விழா நடைபெற இருக்கிறது. இங்கிருந்து தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் குற்றாலத்திற்கு நேரில் சென்று வாழ்த்தவிருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கப் போவது சிபி என்ற புதுமுக இயக்குனர்.









