ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் மகளிர் பிரிவில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. சென் லூசியாவில் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 56 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை வெற்றியீட்டியது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து மகளிர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Sara MC Glashan 84 ஓட்டங்களைப் பெற்றார்.
181 என்ற மிகப்பெரிய வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 56 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதன்படி, Bridgetown இல் நாளை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதவுள்ளன.
இதேவேளை, ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி நாளை Bridgetown இல் நடைபெறவுள்ளது.









