நடிகை தமன்னா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அவருடைய தாய்மொழி சிந்தி. இவர் முதன்முதலாக நடித்த தமிழ் படம், `கேடி.` அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம், `கல்லூரி.`அந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், தமன்னாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
அதையடுத்து தமன்னா, `அயன்` படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமன்னாவின் `மார்க்கெட்` அந்தஸ்து உயர்ந்தது. 7 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், 40 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார்.என்றாலும், `கால்ஷீட்` கொடுக்க முடியாத அளவுக்கு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதைத் தொடர்ந்து தமன்னா தனது சம்பளத்தை 50 லட்சமாக உயர்த்தினார். `பையா` படத்துக்கு, அவர் 50 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்கினார்.
`பையா` படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடுவதால், தமன்னா இப்போது தனது சம்பளத்தை 1 கோடியாக உயர்த்தி விட்டார். இனிமேல் அவர் பிரபல கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறார்.









