நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, மஞ்சள் நிறத்தை விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலிவுட்டில் கொடி கட்டிப்பறந்த நடிகர் பிரபு தேவா, நயன்தாராவுடனான காதல் முறிவிற்கு பின்னர் பாலிவுட்டில் பறக்க முயற்சித்து வருகின்றார்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து பிரபு இயக்கிய ரவுடி ரத்தோர் வசூல் சாதனை படைத்தது.
தற்போது ABCD: Anybody Can Dance என்ற பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுவென நடந்து கொண்டு வருகின்றது.
இதற்கிடையில் அவ்வப்போது நடக்கும் விழாக்களில் மஞ்சள் கலர் அணிந்த ஆடைகளையே அணிந்து வருகிறார் பிரபு.
இதற்கான காரணம் குறித்து நிருபர்கள் கேட்ட போது, பிடித்த நிறம் மஞ்சள் என்றும் இதை தன்னுடைய ராசியான நிறமாக கருதுவதாகவும் பதிலளித்திருக்கிறார்.










