சரத்குமார் நடித்த ‘அரவிந்தன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுக மானவர் யுவன் சங்கர் ராஜா.
‘இசைஞானி’ இளையராஜாவின் இளைய மகனான யுவன், இளம் இசை அமைப்பாளர்களில் தனக் கென்று தனி இடத்தை தக்கவைத்துள்ளார். அஜீத்குமார் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள ‘பில் லா 2’ வரை 99 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
அடுத்ததாக தனது சகோதரரும், இயக்குனருமான வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் யுவன் இசையமைக்கிறார். இது அவருக்கு 100-வது படமாகும்.









