விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளையில் தனது கவர்ச்சியான நடிப்பில் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் கலக்கி வந்த தனுஸ்ரீ, திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 16வது வயதில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன். ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமையானவை. எனக்கு ஆதரவு தரக்கூட நண்பர்கள் இல்லை. காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனவே லடாக் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே என் தலைமுடியை மொட்டை அடித்துவிட்டேன். இதற்கு காரணம் என்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான், என்றார்.









