சிங்ப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடந்தது. இதில் இந்திய மொழிப்படங்கள் திரையிடப்பட்டன. நடிகர் கமலஹா சனின் `விஸ்வரூபம்’ படத்தின் டிரைலர் வெளியிடப் பட்டது.
சிறந்த இந்திய படங்கள் மற்றும் நடிகர்- நடிகைகள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடந்தது. இதில் சிறந்த நடிகர் விருது ராக் ஸ்டார் படத்திற்காக ரன்பீர் கபூருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகையாக வித்யா பாலன் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த இசை அமைப்பாளர் விருது ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை சிங்கம் படத்திற்காக பிரகாஷ்ராஜ் பெற்றார்.









