கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம் என்ன என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல் துளிகள் :
‘கோச்சடையான்’ படம் முடிவடைந்த உடன் ரஜினி தனது அடுத்த படம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
‘கோச்சடையான்’ முடிவடைந்த உடன் ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ராணா’ படத்தில் நடிப்பார் என்று கூறி வருகிறார்கள் கோலிவுட்டில்.
ஆனால் ரஜினியோ கே.வி.ஆனந்த்தை இரண்டு முறை அழைத்து பேசி இருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. இத்தகவலை வெளியே கூற வேண்டாம் என்று கே.வி.ஆனந்திடம் கேட்டுக் கொண்டாராம் ரஜினி.
கே.வி.ஆனந்த் – (எழுத்தாளர்கள் ) சுபா மூவரும் இணைந்து ரஜினி பாணிக்கு ஏற்றவாறு ஒரு கதையை தயார் செய்து வருகிறார்கள்.
ரஜினி – கே.வி.ஆனந்த் கூட்டணித் தகவலை கேள்விப்பட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தினை எப்படியாவது தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில் காய் நகர்ந்தி வருகிறார்களாம். கே.வி.ஆனந்த் தற்போது இயக்கி வரும் ‘மாற்றான்’ படத்தினை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
அது போலவே வரிசையாக 6 படங்களை தயாரிக்க இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், கே.வி.ஆனந்தை தங்களது நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கித் தருமாறு கேட்டு வருகிறாராம். அவர் ஒப்புக்கொண்டால் ரஜினி – கே.வி.ஆனந்த் கூட்டணியை வளைத்து விட வேண்டும் என்பது தான் திட்டமாம்.
இத்தகவலை எல்லாம் பார்க்கும் போது ‘கோச்சடையான்’ படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு தொடங்கிவிடும் போலிருக்கிறது!
‘கொசுறு’ கபாலி : ” ஓடற குதிரை மேல எல்லாரும் பணம் கட்ட ஆசைப்படறது தப்பில்லையே..!
ரஜினி – கே.வி.ஆனந்த் கூட்டணித் தகவலை கேள்விப்பட்ட ஏ.ஜி.எஸ். நிறுவனம்?
Posted By முத்து On 09 Jun 2012. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்
Comments are closed.









