பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த “Men in Black III” படத்திற்கான சிறப்புக்காட்சி, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் திரையிடப்பட்டது.
இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்து பத்திரிகை நிருபர்கள், டிவி கமெராமேன்கள், புகைப்பட கலைஞர்கள் குவிந்திருந்தனர்.
சிறப்பு காட்சியில் பங்கேற்க வில் ஸ்மித் வந்த போது, உக்ரைனை சேர்ந்த டிவி நிருபர் விடாலி செடிக் திடீரென அவரது கையை பிடித்து தோளை கட்டியணைத்து முத்தமிட முயன்றார்.
இதை எதிர்பார்க்காத ஸ்மித், நிருபரை தள்ளி விட்டு இடது கையால் அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அந்த நிருபர், ஸ்மித் கன்னத்தில் முத்தமிட முயன்றாரா அல்லது உதட்டில் முத்தமிட முயன்றாரா என்று தெரியவில்லை என்றனர்.









