தனது மகள் ஜானவி திரையுலகிற்கு வருவதை தான் விரும்பவில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் என நட்சத்திர கதாநாயகர்களுடன் போட்டியிட்டு நடித்து திரையுலகில் அதிகமான நற்பெயரை சம்பாதித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜானவி நடிக்க வருவதாக திரையுலகில் தகவல் வெளியானது.
இதுகுறித்து நடிகை ஸ்ரீதேவி, எனது மூத்த மகள் ஜானவி படங்களில் நடிக்கப்போவதாகவும், ஒரு குறிப்பிட்ட நடிகரின் மகனுடன் நடிக்கப் போவதாகவும் வெளியான செய்தியைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது.
நான் நடிகை என்பதால் என் மகளையும் நடிகையாக்க வேண்டும் என்றும் உடம்பை குறைக்க வேண்டும் எனவும் நான் கட்டாயப்படுத்துவதாக மக்கள் நினைப்பது வருத்தமாக உள்ளது. என் மகள் ஜானவிக்கு 15 வயது தான் ஆகிறது.
அவள் நன்றாகப் படிக்கிறாள். நான் தான் சிறு வயதிலேயே நடிக்க வந்தததால் படிக்க முடியாமல் போனது. எனது மகள்களாவது நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஜானவி நடிகையாவதை நான் விரும்பவில்லை என்றார்.
நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலுடன் ஜானவியை தெலுங்கில் அறிமுகப்படுத்துவதில் ஸ்ரீதேவி முனைப்பாக இருப்பதாக செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக திரையுலகில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி “இங்கிலிஷ் விங்கிலிஷ்” என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க உள்ளார்.









