உனக்கும் எனக்கும் படத்துக்கு பிறகு, நாயகன் ஜெயம் ரவி உடன் பூலோகம் படத்தில் மீண்டும் நாயகி த்ரிஷா இணைகிறார்.
இப்படத்தில் நாயகன் ஜெயம் ரவிக்கு உற்சாக டானிக் தரும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
பூலோகம் படத்தில் முதலில் நாயகி கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க படக்குழு யோசித்தது.
கடைசி நேர மாறுதலுக்கு பின், ஜெயம் ரவியுடன் த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கல்யாண் இயக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் நாயகன் ஜெயம் ரவி பாக்ஸராக வருகிறார்.
நாயகனுக்கு உற்சாக டானிக் தரும் நாயகி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார்.
படத்தில் பக்கத்து வீட்டு இளசு மாதிரியான தோற்றத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கிறாராம் இயக்குனர் கல்யாண்.









