திரையுலக நடிகை சானா கான், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலிவுட்டில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடிகை சானா கான் நடித்துள்ளார்.
பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடிகை சானா கான் நடித்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக அம்மாநில பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாடிக்கையாளர் போல புரோக்கர்களை அணுகிய பொலிஸார், அந்த குடியிருப்பிற்கு சென்றனர்.
அங்கே விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தனர். இவர்களில் சானா கானும் சிக்கினார்.
அவர்களிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய், ஆபாச குறுந்தகடுகள், கைப்பேசிகள், மடிக்கணிணிகள், கமெராக்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
சானா கான் விபச்சாரத்தில் ஈடுபட்டு சிக்கியுள்ள விடயம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









