தனுஷ் நடித்த 3 திரைப்பட பாடல் வை திஸ் கொலவெறி தம்மை மயக்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள ‘த ராகா’ என்ற தமிழ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரசாக் கூறியதாவது, வை திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இந்த பாடல் விருப்பமானதாக உள்ளது. இந்தியர்கள் மீது தமது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.









