சினிமா ஆசை காட்டி பல இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளியது பற்றி, கைது செய்யப்பட்ட நடிகை தாராவின் உதவியாளர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.சினிமா ஆசை காட்டி பல இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதுடன் அப்பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளையும் படம் பிடித்து, ஆண்களையும் மிரட்டி பணம் பறித்த நடிகை தாரா சமீபத்தில் ஐதராபாத்தில் கைது ஆனார். தலைமறைவான அவரது உதவியாளர் ஹனீபை போலீசார் தேடி வந்தனர்.
கடந்த 27.04.2012 ஐதராபாத் இந்திரா நகரில் பதுங்கி இருந்தபோது அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு ரகசிய (ஸ்பை) கேமராவையும், ஒரு டிஜிட்டல்’ கேமராவையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தாராவின் வீட்டிற்கு வந்த பிரபலங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை படம் பிடிப்பதும், அவர்களின் பேச்சை பதிவு செய்வதும், போட்டோ எடுப்பதும் தனது வேலை” என்று ஹனீப் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஹீரோக்களுடன் தொடர்பு
ராஜ்குமார் என்னும் தயாரிப்பாளரும், நான்கு சினிமா ஹீரோக்களும் நடிகை தாரா சவுத்ரியுடன் உல்லாசமாக இருப்பார்கள். கதர் உடையணிந்தவர்களும், பல போலீஸ் அதிகாரிகளும் தாராவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். டிஜிட்டல் கேமரா உதவியுடன் அவர்களின் செக்ஸ்’ லீலைகளை படம் பிடித்து லேப்டாப்’ மூலம் சி.டி.க்களில் பதிவு செய்வேன். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சினிமா பைனான்சியர்கள், நடிகர்கள் என சுமார் 90 பேரின் செக்ஸ்’ லீலைகளை நான் படம் பிடித்திருக்கிறேன்.
ஒரு பிரபல நடிகரை வைத்து சினிமா எடுக்க தாரா தயாராக இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
லீலைகளை படம் பிடித்து
படப்பிடிப்பு ஒன்றில் தாராவுடன் அறிமுகம் ஏற்பட்டு அவருடைய உதவியாளராகி விட்டேன். தாராவின் வங்கி கணக்குகளை பார்ப்பதும், அவரை தேடி வரும் வாடிக்கையாளர்களின் படங்களை பிடித்து கம்ப்யூட்டரில் பதிவு செய்வதும் என் வேலையாகும். சினிமா வாய்ப்புகள் வாங்கித் தருவதாக கூறி பல இளம்பெண்களை தாரா பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபட வைத்ததுடன் அவர்களின் செக்ஸ்’ லீலைகளை படம் பிடித்து வைத்து மீண்டும் மீண்டும் அவர்களை இணங்க வைத்தார்.
எனக்கு தெரிந்து ரூ.70 லட்சம் ரூபாய் தாரா பெயரில் வங்கி டெபாசிட்டுகள் உள்ளன. 10 ரூபாய், 5 ரூபாய் வட்டிக்கு தெலுங்கு சினிமாக்களுக்கு பைனான்ஸ்’ செய்தார். தனுகுவை சேர்ந்த சாரதா, கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த ரமாதேவி, லட்சுமி, பெங்களூரை சேர்ந்த சிராவனி, மேக்னா போன்ற பல இளம்பெண்கள் தாராவின் வலையில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆண்களுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை புளூபிலிம்’ பிடித்து தேவையானபோதெல்லாம் இதை காட்டி மிரட்டி பணிய வைத்தார். இவ்வாறு ஹனீப் கூறினார்.









