மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், மதுரை ஆதீனம் பட்டம் சூட்டினார்.
நடிகை ரஞ்சிதாவுடன் பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா? என்ற கேள்விக்கு,
’’நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமை யினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள்.
இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்’’’ என்று தற்போதைய மதுரை ஆதீனம் பதிலளித்துள்ளார்.
நித்யானந்தாவும் ஆதீனமும் இன்று மதுரை செல்கிறார்கள். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்கள். ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா ஆதீனத்திற்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படவிருக்கிறது.









