கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.
கடந்த 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வந்து அபார வெற்றி பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆனந்த தாண்டவமோ’, ‘பாரதி கண்ணம்மா’, ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு’, ‘சம்போ சிவசம்போ’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எங்கேயும் எப்போதும்’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
இப்படத்திற்குப் பிறகு கமலையும், ரஜினியையும் ஒன்றாக நடிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்தும் அது வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படம் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். படங்களும் மீண்டும் திரையிடப்பட்டன.
அந்த வகையில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.









