தேனாம்பேட்டை அபி புல்லா ரோட்டில் சினிமா இன்ஸ்டிடியூட் நடத்தி வந்தவர் அரவிந்தன். இவர் சினிமா ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை போலீசார் அரவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மூலக் கடையை சேர்ந்த பானு (வயது 29), சென்னை சி.ஐ.டி. நகரை சேர்ந்த நசீமா அக்தர் (35) மற்றும் கரோலின், மணிகுமார் ஆகிய 4 பேர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர்.
பானு தனது புகாரில் கூறியிருப்பதாவது, மிர்ரா விஷன் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு பத்திரிகை ஒன்றில் சினிமாவில் நடிக்க குழந்தை நட்சத்திரங்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
அதை பார்த்து 7 வயது எனது மகள் நந்தினியை நடிக்க வைப்பதற்காக நான் அந்த நிறுவனத்தை அணுகினேன். அதன் தலைவர் அரவிந்தன் எனது மகளை நடிக்க வைக்க ரூ.15 ஆயிரம் வாங்கினார். உங்களது குரல் நன்றாக இருக்கிறது உங்களை டப்பிங் ஆர்ட்டிஸ்டாக்கி விடுகிறேன் என கூறி என்னிடமும் ரூ.10 ஆயிரம் வாங்கிக் கொண்டார். சினிமாவில் நடிப்பது தொடர்பாக நான் அவரது அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது அரவிந்தனின் நண்பர் குட்டியான் பாபு என்பவர், எனக்கு ஒருநாள் மட்டும் கம்பெனி கொடு, உன்னையும் நடிகையாக்கி விடுகிறேன் என கூறினார்.
பயந்து போய் நான் அங்கிருந்து வந்து விட்டேன். பஸ்நிலையம் வரை என்னை துரத்தி வந்த குட்டியான் நான் சொல்கிற படி நடக்காவிட்டால் நடப்பது வேறு என்று என்னை மிரட்டினார். எனவே, பணம் வாங்கி ஏமாற்றிய அரவிந்தன், பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைத்து மிரட்டிய குட்டியான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பானு தனது புகாரில் கூறியுள்ளார்.
இதே போல நசீமா அக்தர் தனது மகளை நடிக்க வைப்பதாக கூறி அரவிந்தன் ரூ.30 ஆயிரம் வாங்கினார் என புகாரில் கூறியுள்ளார். கரோலின் ரூ. 15 ஆயிரம், மணிகுமார் சப் இன்ஸ்பெக்டர் வேடத்துக்காக ரூ.25 ஆயிரமும் கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறியுள்ளனர்.
தமிழ் டைரக்டர் மீது பாலியல் புகார்.
Posted by முத்து on March 17th, 2010



Posted in 






