மலிவான விளம்பரத்துக்காக என் பெயரைக் கெடுக்கிறார்கள்.

நமீதா கதாநாயகியாக நடித்து, திரு டைரக்ஷனில் சமீபத்தில் திரைக்கு வந்த படம், அழகான பொண்ணுதான். இந்த படத்தில் நமீதா ஒத்துழைப்பு கொடுக்காததால், நினைத்த கதையை படமாக்க முடியவில்லை என்றும், தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் தயாரிப்பாளரரையும், என்னையும் நமீதா காலி செய்து விட்டார். எங்களை அழவைத்து விட்டார்.

அநியாயமாக எங்களை தண்டித்த அவரை, கடவுள் நிச்சயமாக தண்டிப்பார் என்றும் டைரக்டர் திரு கூறியுள்ளார்.

இது குறித்து நமீதா,  உண்மையிலேயே திருவுக்கு படத்தை எடுக்கத் தெரியவில்லை. கிறுக்குத்தனமாக உளறுகிறார். உண்மையிலேயே இந்தப் படத்தை நான் பண்ணமாட்டேன் என்றுதான் சொன்னேன். என்னை வற்புறுத்திதான் நடிக்க வைத்தனர்.

தயாரிப்பாளர் சங்கம் வேறு கம்பெல் பண்ணார்கள். திருவுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. அவர் பேசுகிற தமிழ் எனக்குப் புரியவில்லை. உதவிக்கும் யாரையும் அழைத்து வரமாட்டார். இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்.

இதையெல்லாம் மீறி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தும் படத்தை குறித்த காலத்தில் முடிக்கவில்லை. மலிவான விளம்பரத்துக்காக இப்போது என் பெயரைக் கெடுக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இவர்களுக்கு ரியாக்ட் பண்ணக்கூடாது என்று அமைதி காத்தது தவறாகப் போய்விட்டது. என்பெயரைக் கெடுத்து பப்ளிசிட்டி தேடித்தான் படத்தை ஓட்ட வேண்டும் என்று நினைக்கிறார் அந்த டைரக்டர்’’என்று பதிலளித்துள்ளார்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review