கோபம் கொண்ட ரீமாசென்-நடிக்க அழைத்த செல்வராகவன்

விக்ரம் நடிக்க போக்கிரி ரமேஷ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஆனால் தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு இருவரையும் வைத்து இரு படங்களை தயாரிக்கும் ரமேஷ், அதில் சுமார் 70 கோடி ரூபாயை இன்வெஸ்ட் செய்திருக்கிறாராம். ஆனால் ஆந்திராவில் நடைபெறும் தொடர் கலவரம், சூழ்நிலை மாற்றம் இவற்றால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. போட்ட பணமும் லாக்!

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை தள்ளிப் போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். சும்மாயிருக்கிற நேரத்தில் வேறொரு படத்தை இயக்கலாம் என்று களத்தில் இறங்கியிருக்கிறார் செல்வராகவன். இதில்தான் ஆன்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார் தமிழ் தெலுங்கு இரு மொழியில் உருவாகும் இப்படத்தில் ஆன்ட்ரியாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் தெலுங்கு ஹீரோ ராணா.

இரட்டை குதிரை சவாரியை ஏற்கனவே அனுபவித்திருக்கும் செல்வா, இந்த படத்திலும் ரீமாசென்னை நடிக்க வைக்க முயற்சித்தாராம். ஆனால் ஆன்ட்ரியாவை விட பெரிய கேரக்டர் இல்லை. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டு அங்கங்கே தலை காட்டுகிற ரோல்.

கோடி ரூபா கொடுத்தாலும் இதில நடிக்க மாட்டேன். அதுக்கு வேற ஆளைப்பாருங்க என்று முகத்தில் அடித்தாற் போல மறுத்துவிட்டாராம் ரீமா.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review