தலையில் அடிபட்டு கோமா நிலையில் இருந்த நகைச்சுவை நடிகர் முத்துராஜா மரணம் அடைந்தார்
கொலிவுட்டில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் முத்துராஜா நடித்து இருந்தார்.
இதில் கானா உலகநாதன் பாடும்போது முழுக்க அவருக்கு மைக் பிடித்தபடி நடித்திருப்பார்.
மேலும் வெளுத்துக்கட்டு, வேங்கை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, மருதவேலு, உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நகைச்சுவை நாயகன் முத்துராஜாவுக்கு கடந்த மாதம் 30ம் திகதி திருமணம் முடிந்து, மனைவியுடன் சொந்த ஊரான தேனி கே.கே. பட்டியில் தங்கியிருந்தார்.
கடந்த இரு திகதிகளுக்கு முன்பு முத்துராஜா, தனது வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மாடியிலிருந்து கீழே தவறி விழுந்தார்.
இந்த விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை மதுரை அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கு வைத்தியர்கள் தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.







