ஐஸ்வர்யா கர்வம் இல்லாத அழகு: பாரதிராஜா.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கும் இரட்டைச் சுழி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (திங்கள்கிழமை) மாலை நடந்தது. சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களை ஐஸ்வர்யா பச்சன் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இங்கு பேசியவர்கள் எல்லோரும் புலியும் சிங்கமும் இணைந்து நடித்திருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் புலித்தோலையும், சிங்கத்தின் தோலையும் கழற்றி வைத்துவிட்டு, இரண்டு ஆட்டுக் குட்டிகளைப் போலத்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளோம். இந்தப் படத்தில் 22 குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். எங்களையும் சேர்ந்தால் 24 குழந்தைகள்.

ஐஸ்வர்யா ராய்யிடம் அப்படி என்ன இருக்கிறது என்று நான் சிந்தித்துள்ளேன். ஆனால் இப்போது நேரில் பார்க்கும்போதுதான் தெரிகிறது. கர்வம் இல்லாத புன்னகை, கர்வம் இல்லாத பார்வை. அதை விளக்கிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. கர்வம் இல்லாத ஐஸ்வர்யா ராய் உண்மையிலேயே அழகுதான்.

இயக்குநர் சங்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இயக்கும் படங்களை விட அவர் தயாரிக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சங்கரை எல்லோரும் பிரம்மாண்டமாக பார்க்கிறார்கள். ஆனால அவரிடம் ஒரு தனி ரசனை உண்டு. அவருடைய ரசனையை நான் ரொம்பவும் ரசிக்கிறேன். இந்த விழாவை ஏற்படுத்திய சங்கருக்கு நன்றி என்றார்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review