மாஞ்சா வேலு படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் பேசிய நடிகர் கார்த்திக்,
தமிழ் திரையுலகில் நிறைய இளைஞர்களை பார்க்க முடிகிறது. வாரிசுகளையும் பார்க்கிறேன். ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்தியாவிலேயே திறமையான நடிகர்கள் இருப்பது தமிழ் நாட்டில்தான். இதை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாரிசு நடிகர்கள் இந்த புகழை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.
இடையில் சில காலம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். சில சூழ்நிலைகளால் அந்த நிலைமை ஏற்பட்டது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
அருண்விஜய் சிறந்த நடிகர். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.
நடிகர்கள் விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஷாம், சுந்தர்.சி, சிபிராஜ், ஜெய், உதயா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், சிவ சக்தி பாண்டியன், மாஞ்சா வேலு பட தயாரிப்பாளர்கள் டாக்டர் மோகன், ஹேமந்த், இசையமைப்பாளர் மணிசர்மா ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ் நடிகர்கள்தான் திறமைசாலிகள்.
Posted by முத்து on March 15th, 2010




Posted in 




