ப்ரீத்தி ஜிந்தாவின் அரசியல் பிரவேசம்?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாரபட்ச நிலை மாறும் என நம்புவோம். என்கிறார் பாலிவுட் நடிகையும், ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பார்ட்னருமான ப்ரீத்தி ஜிந்தா டெல்லியில் நிருபர்களை சந்தித்தார்.

இட ஒதுக்கீடு சட்ட மூலம் இந்திய பெண்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டேல், காங்கிரஸ் தலைவர் சோனியா என சக்திவாய்ந்த பதவிகளில் பெண்கள் இருந்தாலும், எல்லா பெண்களுக்கும் அதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

எனக்கு அரசியல் திட்டம் இப்போதைக்கு இல்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கு என்று ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். பல்வேறு கேள்விகளுக்கு ப்ரீத்தி ஜிந்தா பதில் அளிக்கையில், அரசியலில் ஈடுபட மாட்டேன் என சொல்ல மாட்டேன். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட பயணம் போக வேண்டியுள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.

சினிமா மற்றும் கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ள ப்ரீத்தி தற்போது ஐநா எய்ட்ஸ் திட்டத்துக்கு நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரீத்தி ஜிந்தாவிடம் நிருபர்களை சந்தித்த போதே மேற்படி தெரிவித்தார்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review