விவாகரத்து கேட்டு செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீதிமன்றம் சென்றபோது இவர்கள் இத்தனை நாள் இணைந்து இருந்ததே பெரிய விசயம் என்று சொன்னது கோடம்பாக்கம்.
ஆனால் செல்வா தந்தை கஸ்தூரிராஜாவோ, நிச்சயம் என் மகனும், மருமகளும் இணைந்துவிடுவார்கள் என்று சொன்னார். ராஜாவின் கனவு பலிக்கவில்லை.
இருவரும் பிடிவாதமாக இருந்து விவாகரத்து வாங்கிவிட்டார்கள்.
இயக்குநர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு இரண்டாவதாக இயக்கிய படம் காதல் கொண்டேன்.
இப்படத்தில் நாயகியாக நடித்த சோனியா அகர்வாலுடன் இவருக்கு காதல் உண்டானது.
தொடர்ந்து செல்வா இயக்கிய 7ஜி ரயின்போ காலணி, புதுப்பேட்டை படங்களிலும் சோனியாவே நடித்தார்.
சோனியா அகர்வால் மார்ச்-28ல் பஞ்சாப்பில் பிறந்தவர்.
எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று சொல்லி வந்தவர்கள் டிசம்பர்-15-2006ம் ஆண்டு காதல் திருமணம் என்று அறிவித்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு இணைந்திருந்த இவர்கள் கடந்த ஒரு வருடமாகவே பிரிந்திருந்தார்கள்.
ஆறு மாதங்களூக்கு முன்பு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்தன.
இந்நிலையில் இன்று(13.3.2010) நீதிபதி ராமலிங்கம் இம்மனுவை விசாரித்து இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.
-வடபழனிவாலு




Posted in 






