சரத்குமார் நடிக்கும் விடியல் படத்தின் அறிமுக விழா இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் சரத்குமார் தந்தை – மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் நாயகியாக சினேகா நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக விழாவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதில் அளித்தார்.
கேள்வி: நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதுகுறித்து நடிகை ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?
பதில்: அது ரஞ்சிதாவின் சொந்த விஷயம். அதற்கும் நடிகர் சங்கத்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் நாம் தலையிட முடியாது. நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
கேள்வி: நடிகை ரஞ்சிதா மீது தவறில்லையா?
பதில்: ரஞ்சிதா மீது எந்த தவறும் இல்லை. முழு ஆன்மீகவாதியாகிய பின்னர் பெண் ஆசை பிடித்த நித்யானந்தா மீதுதான் தவறு.
கேள்வி: நடிகைகள் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதற்கு கண்டனப் போராட்டம் நடத்தினீர்கள். ரஞ்சிதா விஷயத்தில் கண்டனப் போராட்டம் நடத்துவீர்களா?
பதில்: அதைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை.
கேள்வி: நடிகர் விவேக் இன்னும் நித்யானந்தாவின் புகழை பாடி வருகிறார். அவரை நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கி வைப்பீர்களா?
பதில்: அப்படிப் பார்த்தால் கடந்த 10 வருடமாக எனக்கும் நித்யானந்தா பழக்கம்தான். நான் நடத்தும் பத்திரிகையில் என்லைட்மெண்ட் பற்றி தொடர் எழுதி வருகிறார். அதற்காக என்னையும் நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கி வைப்பீர்களா?





Posted in 




