கொலிவுட் நடிகர்களில் ரஜினியை மட்டும் எனக்கு பிடிக்கும்
Posted On 15 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
பண்டலூன்ஸ் பெமினாவின் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட 'மிஸ் இந்தியா' இஷிதா சர்கார் கொலிவுட் படங்களில் நடிக்க யோசித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு பொழுது போக்கு கலை நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் அவர்.
அதில் அவர் பேசுகையில் சென்னை ஒரு அட்டகாசமான இடம், மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கும் போது சென்னை மட்டும் தன் அடையாளத்தை இழக்காமல் அப்படியே உள்ளது.
அதன் சரித்திர புகழ் பெற்ற வேர்களும் ... Read More
No Comments
நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடிக்கிறது
காமெடி நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடிக்கிறது. ஏற்கனவே இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இதில் சிங்கமுத்து கைதானார். சட்டமன்ற தேர்தலில் வடிவேலு தி.மு.க.வுக்கும் சிங்கமுத்து அ.தி.மு.க.வுக்கும் பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து சிங்கமுத்து கூறியதாவது:-
தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏற்கனவே ஆட்சி செய்த ஜெயலலிதாவின் நிர்வாகக் திறனையும் கருணாநிதியின் நிர்வாகத்திறனையும் ஒப்பிட்டுப்பார்த்து ஜெயலலிதா நிர்வாகமே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து அ.தி.மு.க. விடம் ஆட்சியை கொடுத்துள்ளனர்.
கடந்த ... Read More
No Comments
ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்
Posted On 15 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தகவல், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி தற்போது சாதாராண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இல்லை என்றும் அந்த மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் டி.ஜி. நல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நுரையீரலில் தொற்று பாதிப்பு குறித்து அவருக்கு முழு பரிசோதனை நடைபெறுவதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் ... Read More
No Comments
எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை ஜெயம் ரவி
Posted On 15 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
கணிசமான அளவில் ரசிகைகள் தனது படங்களை ரசித்து பாராட்டுவதால் ஜெயம்ரவி சில சமயங்களில் மிகவும் உற்சாகத்தில் இருப்பார்.
எல்லா வயது பெண்களும் என் நடிப்பையும் என் படத்தையும் விரும்பி ரசிக்கிறார்கள். அதனால் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் மனம் விட்டு பேச நினைத்துள்ளார்.
அந்த பேட்டியில் சினிமா நடிகருக்கு ரசிகை இருப்பது பைத்தியகாரத்தனமாக இல்லையா என்று கேட்கிறார்கள். ஒரு சென்னை பொண்ணு தன் கையில் பச்சை குத்திட்டு வந்து காட்டி அதிர வைத்துள்ளார்.
எனக்கு என்ன ... Read More
No Comments
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர்
Posted On 14 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவராக இருந்த ராம.நாராயணனும், செயலாளராக பணியாற்றிவந்த சிவசக்தி பாண்டியனும் பதவியை ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து அவர்களின் ராஜினாமாவை சங்கத்தின் செயற்குழு ஏற்றுக்கொண்டது.
சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ... Read More
No Comments
உருட்டுக்கட்டையுடன் தேமுதிகவினர் அச்சுறுத்துவதாக வடிவேலு புகார்!
Posted On 14 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
மதுரையில் நடிகர் வடிவேலு வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு முழக்கம் செய்வதாகவும், உருட்டுக்கட்டையுடன் வந்து அச்சுறுத்துவதாக நடிகர் வடிவேலு போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More
No Comments








